வாணி கலைவாணி
Please click the above link and go to PHOTOS App to hear the song .
வாணி கலைவாணி அருள்
வாக்கினுக் கவள்ராணி
பாடலில் அவளைப் பேணி இந்தப்
பாலை மனமெங்கும் கேணி (வாணி)
அவளே வார்த்தை தந்தாள் அதை
அவளே பாட வைத்தாள்
அவளே எதிரே அழகாய் அமர்ந்து
ஆனந்தத் தலையசைத்தாள்
என்னம்மா
அவளே எதிரே அழகாய் அமர்ந்து
ஆனந்தத் தலையசைத்தாள்
கொஞ்சம் அவளே கண்பனித்தாள் - இன்ப (வாணி)
ஓட்டைக்கலம் உடைந்துவிடும் இந்த
உயிர்ப்பறவை பறந்து விடும் அதில்
பாட்டாய் எழுந்த பரவசம் மட்டும்
பல காலம் வாழ்ந்திருக்கும் - அது
பலபேரின் கண் துடைக்கும் (இன்ப வாணி)
விண்ணிலே இருந்தாலும் மழை
வீதியில் தான் விழ வேண்டும்
எண்ணங்கள் கவிதைகள் கானங்கள் பொங்கிட
கிடைத்ததுதான் தேகம் அதைக்
கடப்பது தான் யோகம்
என்னவோ காதல் இது சற்றும் இறங்காத போதையிது
ஒரு ராஜன் வீதியில் ராப்பிச்சை போலே
பாட்டாய் நடக்கின்றான் அவளும்
பாவம் தொடர்கின்றாள் (இன்ப வாணி)
---இசைக்கவி ரமணன்
1974

Comments
Post a Comment